மனித உடலில் கண், சிறுநீரகம், கல்லீரல் இருதயம் உள்ளிட்ட உறுப்புக்கள் மாற்று ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி குறிப்பிட்ட ஒரு உறுப்பு மட்டுமே ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு வரும் நிலையில், தலை மாற்று ஆபரேஷனையும் நடத்த முடியும் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செர்ஜியோ கானவேரோ என்கிற இத்தாலியை சேர்ந்த நரம்பியல் டாக்டர் இவர்.தானம் கொடுப்பவரின் தலையை மிகவும் நுன்னிப்பாக வெட்டி அதை தானம் பெறுபவரின் தலை வெட்டப்பட்ட உடலில் பொறுத்த முடியும் என்று அதிசயமிக்கத் தகவலை கூறியுள்ளார்.
அதை அதி நவீன பாலிமர் பசை மூலம் ஒட்ட முடியும். மின் அதிர்வு மூலம் அந்த பசையை உருக்கி ஒட்ட முடியும் என்றும் கூறியுள்ளார் அவர். இந்த தகவல் சர்வதேச நரம்பியல் அறுவை சிகிச்சை என்கிற மருத்துவ நாளிதழில் வெளியாகியுள்ளது.ஆலிவுட் இயக்குனர் மேரி ஷெல்லியின் டாக்டர் பிரான்கேன்ஸ்டீன் என்கிற படத்தில் இடம்பெற்ற காட்சியை முன்னோட்டமாக வைத்து இந்த சாதனையை நிகழ்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
0 Responses to மனிதனுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சையும் செய்ய முடியும் - இத்தாலி மருத்துவர் தகவல்!