Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழக இயக்குனர் வெங்கடேசன், அகில இந்திய உறுப்பினர் சிவண்ணா ஆகியோர் இன்று காலை தர்மபுரி சென்றனர். அவர்களை மாவட்ட வருவாய் அதிகாரி ராமர் வரவேற்றார்.
 
தர்மபுரி சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர்கள் பின்னர் இளவரசனின் சொந்த ஊரான நத்தம் காலனிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். பிற்பகலில் இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேனி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் போது இளங்கோ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் அதிகாரிகளிடம் 6 கோரிக்கைகள் கொண்ட மனு கொடுத்தார்.
அம்மனு விபரம் :

1. விசாரனை மத்திய அரசு புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டும்

2. எனது மகனின் காதல் திருமணம் நடைபெற்றது முதல் இறப்பு வரை சதிதிட்டம் தீட்டிய பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2-A. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீது சட்டவிதிகளுக்கு மாறாக நடைபெற்ற விசாரணையால் நீதிபதிகள் மீதும் விசாரணை செய்ய வேண்டும்.

3. இளவரசனை இழந்து தவிக்கும் எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

4. எனது மகனின் மனைவி திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்.

5. எனது மகனின் உடற்கூரை மறு ஆய்வு செய்யவேண்டும்.

6. எனது மகனின் இறுதி ஊர்வலத்தில் ஜனநாயக தலைவர்களும் பங்கேற்க ஏதுவாக தர்மபுரி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும்.

0 Responses to திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்; நீதிபதிகள் மீது விசாரணை செய்ய வேண்டும் : இளங்கோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com