மிக நீண்டதொரு இழுத்தடிப்புக்களின் பின்னர் தான் அவர் பேச சம்மதித்தார்.தான் வாழும் சூழல் தனது பெயர் என எவற்றையும் பகிர்ந்து கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.
பலநேரங்களினில் அதிர்ந்து போய் மௌனமாக இருந்த அவரை மீட்டெடுக்கவேண்டியிருந்தது.
எல்லாமுமே முடியப்போகின்றதென்ற முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணத்திலும் கரும்புலியாக உத்தரவை ஏற்று முன்னரங்கப்பகுதியை நோக்கி நகர்ந்து வெடிக்கச்சென்றிருந்தார் அவர். ஆனாலும் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை தாக்கி வயிற்றுப்பகுதியினில் படுகாயமடைந்து மயக்கமுற்று வீழ்ந்திருந்தார்.அங்கிருந்து வெளியேறி இராணுவப்பக்கம் நோக்கி நகர்ந்த குடும்பங்களினில் ஒன்று குற்றுயிராக கிடந்த அவரை மீட்டு தம்மோடு வெளியே கொண்டுவந்திருந்தது
வவுனியாவிலுள்ள வைத்தியசாலையினில் மயக்கம் தெளியும் வரையினில் தான் உயிரோடிருப்பது அந்த கரும்புலி போராளிக்கு தெரியாது.ஆனாலும் கடைசி வரை வந்து குழம்பிப்போன மூன்றாவது தாக்குதல் இதுவென்கிறார் சிரித்தவாறே. ஏற்கனவே முன்னரும் இதே போன்று கடைசிக்கணத்தினில் தாக்குதல் நடவடிக்கைகளினில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்களை அவர் நினைவு கூருகின்றார்.
உண்மையிலேயே கரும்புலிகளாக தாக்குதல்களிற்கு போன ஒவ்வொரு கணமும் எங்கடை மக்களும் அண்ணையும் தான் மனசில் நப்பினம்.எங்கட அர்ப்பணிப்பால போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி இன்னுமொரு அடி நகருமெண்டே நம்பினோம்.அதால மரணம் எங்களிற்கு பொருட்டாக இருக்கேயில்லை.
கரும்புலிகள் எவையுமே வெடிக்கிறதுக்கு முன்னதாக தங்களை கரும்புலிகள் எண்டு வெளிப்படுத்தேலாது.அதை இண்டை வரைக்கும் நான் உறுதியாக கடைப்பிடிக்கிறன்.அதனால தான் பகிரங்கமாக பத்திரிகைகளோட கதைக்க விரும்பியிருக்கவில்லை. ஆனாலும் கதைக்க வேண்டிய கால சூழல்.
இலங்கை அரசு இது வரை புனர்வாழ்வு அளிச்சதா சொல்லிவி;ட்டவங்களிற்குள்ள கரும்புலிகள் ஒருத்தரும் இருக்கயில்லை.அவங்கள் இப்பவும் எங்களை தான் பயத்தோட் பார்க்கிறாங்கள்.வகைப்படுத்தலில மூத்த போராளிகளை மாதிரி எங்கடை போராளிகளை விடுவிக்க கூடாதென்ற பட்டியலில வச்சிருக்கிறதா கேள்விப்பட்டனான்.
நான் இப்ப குடும்பத்தோடை இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறன்.இவ்வாறான சிவில் சமூகத்தோட இணைஞ்சு இலக்கு அறிவிக்கப்படும் வரை வாழுற வாழ்க்கை எனக்கு சாதாரணமானாது. கொழும்பில ஒன்பது வருசம் காத்திருந்து தனக்கு தான் முதல் சந்தர்ப்பம் தரவேணுமெண்டு வெடிச்ச அக்காவை எனக்கு தெரியும். பிரேமதாசவோட வியாபாரம் செய்துகொண்டிருக்கேக்க கரும்புலி போக தாமதமாகின்றதென்று தானே வெடிச்ச பாபு அண்ணை பற்றி எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே.
மஹிந்த முதல் கோத்தா வரை சாதாரண சிப்பாய்கள் கூட இதுக்குத்தான் இப்பவும் பயந்து சாகிறாங்கள்.இப்பவும் அவங்களிற்கு ஜந்து அடுக்கு பாதுகாப்பு தேவைப்படுகுது. அவங்களிற்கு தெரியும் போராட்டம் முடியவுமில்லை.எல்லாமும் இல்லாமலும் போகேல்லை.
அண்மையினில் ஒட்டுக்குழு தலைவர் சித்தார்த்தன் சொன்னதா பேப்பரிலை படிச்சனான். மஹிந்த முதல் யார் யாரெல்லாம் கரும்புலிகளிற்கு பயந்து பங்கருக்குள்ள பதுங்கியிருந்தவையெண்டு தெரியுமெண்டு அந்தாள் சொல்லியிருந்தது.அரசாங்கத்திற்கு தெளிவாக தெரியும்.வன்னிக்கு வெளியில நிண்ட கரும்புலிகள் அகப்படவுமில்லை. அவையளின்ர டம்முகள் பிடிபடவுமில்லையெண்டு நல்லாத்தெரியும்.உதுகளை சொன்னா சிங்கள சனம் கெலிச்சுப்போடும்.அதனால தான் கோத்தா கும்பல் அடக்கி வாசிக்குது.
எங்கடை போராட்டம் தொடரும். அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது மக்களின்ர கடைமை.இஞ்ச எதுவுமே மாறவேயில்லை. நாங்கள் எதற்காக போராட வெளிக்கிட்டமோ அந்த இலக்கினை தவறவிடக்கூடாது.
முதலில சனத்தை பழைய நிலைக்கு கொண்டுவர புலம்பெயர் சொந்தங்கள் இன்னும் கைகொடுக்கவேண்டும்.படிப்படியான நாங்கள் மீண்டும் எழுவோம்.எங்கட இடிச்சழிச்ச மாவீரர் துயிலுமில்லங்களை தாண்டிப்போகேக்க எல்லாரும் எழும்பி நின்று கூப்பிடுறமாதிரி இருக்கும்.
அதிலையும் முதல் கரும்புலி மில்லர் அண்ணா வெடிச்ச இடத்தில இருந்த அவருடைய தூபியையும் இடிச்சுப்போட்டாங்கள்.கட்டிடங்களை இடிக்கலாம்.ஆனால் எங்கட மனசுக்குள்ள கோயில் கட்டி வைச்சிருக்கிற அவங்களை என்ன செய்வினம்.ஆனாலும் தாண்டிப்போற ஒவ்வொரு செக்கனும் என்ர இலக்குக்காக நான் காத்திருப்பன்.அது எத்தின வருசமெண்டாலும் பரவாயில்லை....

0 Responses to எவ்வளவு வருடமானாலும் இலக்குக்காக காத்திருப்பன் :கரும்புலி