1917ம் ஆண்டில் பேசாத படமும் 1931ம் ஆண்டு காளிதாஸ் எனும் பேசும் படமும் தமிழில் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரையுலக சம்மேளனம், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மாநில மொழிகளின் சார்பாக விழ நடத்த உள்ளது.
செப்டெம்பர் 21ம் திகதி இந்த விழா தொடங்கி, 24ம் திகதி வரை நடக்க உள்ளதால், விழாவின் கடைசி நாளான 24ம் திகதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் இப்போதே துவங்கியுள்ளது. நான்கு மொழிகளிலும், விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால், சிறந்த படங்கள், சிறந்த சாதனையாளர்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரிக்கும் முயற்சியிலும் ஒரு குழு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Responses to இந்திய சினிமா நூற்றாண்டு விழா : சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி