கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் மாநட்டை நடத்துவதற்கு
முனைப்பாக செயல்படும் இந்திய அரசின் தமிழின துரோகத்தைக் கண்டித்து, இந்திய
பிரதமர் மன்மோகன்சிங் தமிழக வருகையை எதிர்த்தும் திருச்சியில் எதிர்வரும் 2
ம் திகதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குரல் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் மான உணர்வு உள்ள தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கும் நிலையை மாற்றுவதற்காகவே, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நவம்பர் 17, 18 ஆம் திகதிகளில் ராஜபக்ஷ தலைமையில் நடத்துவதற்கு இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நீதியை புதைகுழிக்கு அனுப்பவே இந்திய அரசும், சிங்கள அரசும் வஞ்சகமாகச் செயல்படுகின்றன.
ஈழத்தமிழர்களுக்கும் தாய்த் தமிழகத்துக்கும் மன்னிக்க முடியாத துரோகம் இழைக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன்சிங், ஓகஸ்டு 2 ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு வரப்போகிறார். அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to இந்திய அரசின் தமிழின துரோகத்தை கண்டித்தும் பிரதமரின் வருகையை எதிர்த்தும் போராட்டம் நடத்தப்படும்: வைகோ