டெல்லி பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி எனத்
தீர்ப்பளிக்கப்பட்ட இளம் இஸ்லாமிய நபர் ஷாஹ்ஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை
வழங்கி டெல்லி ஷெஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு செப்டெம்பரில் டெல்லியில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பட்லா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அங்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், அதீப் அமீன், முகத் ஜஜித் எனும் இரு சந்தேக நபர்கள் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் சர்மா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
தலைமைக் காவலர்கள் பல்வந்த் சிங், ராஜ்பீர் சிங் ஆகியோர் காயம்டைந்துள்ளனர். இக்கொடூர தாக்குதலில் இளம் இஸ்லாமியரான ஷாஜத் அகமது ஈடுபட்டமைக்கு ஆதாரம் இருப்பதாக அவர் மீது அதிக பட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த என்கவுண்டர் சம்பவம் போலியானது எனவும் ஷாஜத் அகமது ஓர் அப்பாவி எனவும் மறுதரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம், ரூ.95,000 தண்டனைப் பணமாகவும் அறிவித்துள்ளது. இதில் ரூ.40,000 உயிரிழந்த ஷர்மாவின் குடும்பத்திற்கும், ரூ.20,000 காயமடைந்த காயமடைந்த கான்ஸ்டபிள்களின் குடும்பத்திற்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to பட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கு : ஷாஹ்ஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி நீதிமன்றம்