தனி தெலுங்கானா வேண்டும் என்று போராடுபவர்களுக்கும், தனி தெலுங்கானா
வேண்டாம் என்று போராடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, இன்றைய
அறிவிப்பு இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்று, மத்திய அமைச்சர்
நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று மாலை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் முக்கிய தொண்டர்களுடன் சோனியாகாந்தி அவர்கள் தனித் தனியாக ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் மாலை கூடும் காரிய கமிட்டிக் கூட்டத்தில், இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, தனி தெலுங்கானா அமைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது." என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் இருந்தே ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் முக்கிய தொண்டர்களும், டெல்லியில் முகாமிடத் தொடங்கியுள்ளனர். இவர்களிடம் சோனியா காந்தி மற்றும் முக்கியத் தலைவர்கள் இவர்களைத் தனித் தனியாக அழைத்து ஆலோசனையும் நடத்த தொடங்கியுள்ளனர்.
இன்று மாலை அறிவிப்பு வெளியாகவுள்ளதால் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தற்சமயம் டெல்லி வந்துள்ளார். அதே போன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் சுஷில் குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், திக்விஜய் சிங் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர்.
தனி தெலுங்கானா அறிவிப்பு குறித்து, இரு தரப்பினரும் பாதிக்கப் படாதவாறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மிகவும் கவனமுடன் செயல்படுகிறார் என்று டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to தனித் தெலுங்கானா அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது!