புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மத்திய அரசு இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் புத்த பிஷுக்க்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தீவிரவாத தாக்குதல்தான் என்பதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்து இருப்பதோடு, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளனர் என்றும்,
அம்மாநில அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சென்னையில் புத்த பிஷுக்கள் தங்கும் இடம் மற்றும் இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பீஹார் மாநிலம் புத்தகயாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் மிகவும் கோழைத்தனமான தாக்குதல், இந்துக்களின் மனதை மிகவும் புன்படுத்திப் பார்க்கும் செயல் என்று, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை பீஹார் மாநிலம் புத்தகயாவில் வெவ்வேறு 8 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. இந்தகுண்டு வெடிப்பு சம்பவத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் இருவர் புத்த பிஷுக்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து பீகாரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "புத்த கயாவில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதல் மிகவும் கோழைத்தனமான செயல். இந்துக்களின் மனதை புண்படுத்தி பார்க்கும் கொடும் செயலாகவும் இது அமைந்துள்ளது. இந்த தாக்குதலை நிகழ்த்தியவர் யாராயினும் அவர்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தொடர்புடையவர்கள் தாங்களாக முன்வந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.
0 Responses to புத்தகாயா தாக்குதலால், இலங்கை தூதரகங்களுக்கு இந்திய மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை