இலங்கை இன்னும் குற்றச்செயல்கள் நிறைந்த நாடாகவே இருக்கிறது. மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் சரிவர காப்பாற்றப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டி பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகமான கமலேஷ் சர்மாவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இலங்கையினால் சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கொழும்பில் (இலங்கையில்) நடத்துவது, ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை விடயங்கள் எதிலுமே முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. நீதித்துறை நியாயமான முறையில் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமி வழிபாட்டு இடங்கள் பௌத்த குண்டர்களினால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகியுள்ளன. இப்படி குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்தே வந்துள்ளது. இந்த நிலையில், இலங்கையை கண்டிக்காமல் விடுவது பாரிய அத்துமீறல்களைச் செய்ய வழிவகுக்கும் என்றும் மங்கள சமரவீர எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to இலங்கையில் குற்றச்செயல்கள் குறையவில்லை; பொதுநலவாய நாடுகளிடம் மங்கள குற்றச்சாட்டு