இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்று முன் தினம் நடந்த மோதல்
ஒன்றில் பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று
பாகிஸ்தான் தூதர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கண்டனம்
தெரிவித்து உள்ளார்.
அண்மைக் காலமாக இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துளதால், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ராவலகோட் நகரில், ராச்சகரி செக்டரில் இந்திய இராணுவத்தினர் இத்தாக்குதலை முன்னெடுத்ததாகவும் இதில் தமது இராணுவத்தின் ஒரு கீழ் மட்ட இராணுவ வீரரும், டாட்டா பானி செக்டரில் இடம்பெற்ற தாக்குதலில் மற்றுமொரு இராணுவ வீரரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 2003ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் ஒப்பந்தத்தை இந்தியா மீறியுள்ளது என்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு குழந்தை, மற்றும் பெரியவர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to எல்லையில் மோதல் : இம்முறை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இருவர் பலி?