Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'மெட்ராஸ் கஃபே'  என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி  திரையிடவும் திட்டம்  தீட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடிய மண்ணிலும் மற்றய புலம் பெயர் தேசங்களில் எல்லாம் எதிர் வரும் ஆகஸ்ட் 23 ம் திகதி இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக கேள்விப்படும் நாம்  இதனை வன்மையாக கண்டித்து எதிர்க்கின்றோம்.

சனல்-4 மாதிரியான ஆதார பூர்வமான திரைப்படத்தை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, இப்படியான புனை கதைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மூன்று மொழிகளில் திரையிட்டு மக்களின் மனதில் இராணுவத்தை மேலாகவும்இ தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளையும், போராட்டத்தையும் இழிவு படுத்தவும் முயற்சிக்கின்றது.

ஈழத்தமிழினத்தை கூட்டுசதியால் முள்ளிவாய்க்கால் படுகொலையில் அழித்தது போதாது என்று இப்பொழுது இந்த பரப்புரை சூழ்ச்சியிலும் களமிறங்கி உள்ளன இந்த தமிழின பகைவர் கூட்டம். இந்த வஞ்சனை சூழ்ச்சியை  ஒட்டு மொத்த தமிழினமும் வலிமையோடு எதிர்க்க வேண்டும்.

தமிழர்களை இழிவு படுத்தி. தமிழர் இன விடுதலைப் போரட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டு தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம்  இந்த திரைப்படம் திரையிடப்படுவது எத்தகைய கயமைத்தனம்!!! இத்திரைப்படத்தை திரையிடுவதன்மூலம்  தமிழர்கள் பணத்தை சுருட்டி தமிழரைக்கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்த சதிச் செயலுக்கு எந்த தமிழர்கள் ஆதரவு கொடுத்தாலும் அது தமிழ் இனத் துரோகமாகவே கருதப்படும். 

ஈழத் தமிழர்களது நீதிக்கான நியாயமான விடுதலைப் போராட்டம் தமிழக தமிழர்களையும் உலகத் தமிழ் மக்களையும், வேற்று இனத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அணிசேர்த்து வலுவடைந்து வரும் நிலையில் இந்த உணர்வை சிதைத்து எம் தமிழீழ விடுதலைபோராட்டதின் பால் தமிழர்க்கு உள்ள நம்பகத்தன்மையையும் பற்றுறுதியையும் முறியடிக்கும் நோக்கோடு திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது  இத்திரைப்படம். 

தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை பாதிக்கும் வலுவான ஊடகம் திரைத்துறை என்பதை உணர்ந்து இலங்கை அரசு அதனையே ஆயுதமாக தேர்ந்தெடுத்து இந்த சக்திவாய்ந்த ஊடகத்தினூடாக ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை வில்லத்தனமான சூழ்ச்சியோடு எமக்கு எதிரான ஆயுதமாகப்  படைத்துள்ளது . அது மட்டுமன்றி தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை உலகெங்கும் திரையிட்டு தமிழர்களின் நிதியை அபகரிப்பதோடு தமிழர்க்கெதிரான சூழ்ச்சியான இழி கருத்தையும் வஞ்சகத்தோடு விதைக்கும் வஞ்சனையோடு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இந்த வஞ்சகத்தை புரிந்து கொண்டு தமிழர்கள் விழிப்புணர்வோடு செயற்பட்டு இந்த திரைப்படத்தை கடுமையான கண்டனத்தோடு  புறக்கணித்து எம் இனமானத்தை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்! 

இந்த திரைப்படத்தை வன்மையாக கண்டித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டத்தில் மாபெரும் மக்கள் திரட்சியாக அணிதிரள்வோம்! எமது வலிமையான போராட்டத்தினூடாக இனியொரு காலமும் இத்தகைய சூழ்ச்சியில் இலங்கை அரசு எக்காலத்திலும் இறங்காது இருப்பதை உறுதி செய்வோம்!

விழித்தெழுவோம்! அநீதிகளை மிதிதெழுவொம் ! ஒன்றுபட்ட தமிழினமாக மக்கள் சக்தியாக அனைத்து சூழ்ச்சிகளையும் வென்றெழுவொம் !

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct

0 Responses to ‘மெட்ராஸ் கஃபே' திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிப்போம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com