Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்சினிமாவில் எல்லாவற்றை பற்றியும் பாட்டெழுதியாகிவிட்டது. ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி என்று அதையும் தேடி பிடித்து அதன் இறக்கையை முறித்துவிட்டார் அறிமுக இயக்குனர் ரா.நா.சரவணன்.

கொசுவை பற்றிய பாட்டுதான் அது. 'கூறுகெட்ட பிறப்பே, கூவத்தோட சிறப்பே' என்று துவங்கும் அந்த பாடலில் கொசுவின் அத்தனை பெருமைகளையும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் சரவணனும் இசையமைப்பாளர் மோகன்ஜியும்.

'முகம் நீ அகம் நான்' என்கிற படத்தில் அந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் ஆடியிருக்கிறார். செட்டெல்லாம் போட்டு ஷாட் வைக்கிற நேரத்தில் கூல் ஜெயந்தின் அம்மா இறந்துவிட்ட தகவல் வந்ததாம். தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாதே என்று ஆடி முடித்துவிட்டுதான் கிளம்பினாராம் கூல்.

ஆட்டமா ஆட்ற முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

0 Responses to தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தொழிலில் அக்கறை காட்டிய நடன இயக்குனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com