25 வயதான மேனிங் மீது கடந்த ஜூலை 20ம் திகதி குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படவிருந்ததால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தான் அமெரிக்கா மீதான நாட்டுப்பற்றில்லாது இக்காரியத்தை செய்துவிட்டதாக மேன்னிங் ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்தார். மேன்னிங்கின் ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடமும் மேன்னிங்கின் தண்டனையை குறைக்குமாறு தனிப்பட்ட வகையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே 112 நாட்கள் மேன்னிங் சிறையில் கழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரச தரப்பினால் மேன்னிங்கிற்கு 60 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என வாதிடப்பட்ட போதும் மேன்னிங் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியதால் 35 வருட தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 இல் ஈராக்கிலிருந்த போது, அமெரிக்க இராணுவத்தினரால் எவ்வாறு ஈரான் சிறைக்கைதிகள் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள், எவ்வாறு ஆயுத தாரிகள் அல்லாதவர்கள் குண்டுவீசி கொல்லப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு இராணுவ இரகசிய தகவல்களை மேன்னிங் விக்கிலீக்ஸிடம் வழங்கியிருந்தார்.
மேன்னிங் தண்டனை அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது கறுப்பு நிற டீஷேர்ட் அணிந்திருந்த மேன்னிங்கின் ஆதரவாளர்கள் , 'உங்களுக்காக காத்திருக்கிறோம், நன்றி பிராட்லி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்' என கோஷமிட்டனர்.
0 Responses to பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்