சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் பாதுகாப்பு வாகனம் மோதி அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில், ‘’சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை மாலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பங்கேற்றார். விழா முடிந்த பின்னர் அவர் காரில் இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அவர்
காருடன் முதல்வரின் பாதுகாப்பு படை வீரர்களின் கார்கள் சென்றன. அந்த
கார்கள் காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே செல்லும்போது
முதல்வரை வரவேற்க நின்றிருந்த அதிமுகவினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்,
சோழவரம் அதிமுக ஒன்றிய செயலர் கரிகாலன் பாது காப்பு படை வீரர்கள் வாகனம்
மீது விழுந்தார். இதில் காயமடைந்த அவர், அரசு பொது மருத்துவ மனையில்
வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்’’என்று கூறப்பட்டுள்ளது.
0 Responses to ஜெயலலிதா பாதுகாப்பு வாகனம் மோதியதில் அதிமுக நிர்வாகிக்கு மருத்துவமனையில் சிகிச்சை