Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மதுரையில் கனரா வங்கி கல்விக் கடன் மற்றும் சிறுதொழில் செய்ய வழங்கும் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் சிதம்பரம். அப்போது, மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,

மாணவர்களுக்கு தற்போது வழங்கும் கல்விக் கடன் 10 வருடங்களில் பலன் அளிக்கும் என்றும் கூறியுள்ளார். அதே போன்று சிறுதொழில் செய்வோருக்கும் கடனை உடனடியாக வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும், அப்போதுதான் வங்கிகளும் வளர்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளார். அப்போதுதான் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மிக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வருகிறது என்று கூறியுள்ளார்.

0 Responses to கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது!:ப.சிதம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com