இலங்கையின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி மோதல்களின் போது இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள இந்தியாவின் கட்சிகளும், அமைப்புக்களும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளி்ட்ட உயர்மட்ட தலைவர்கள் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கைகளை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இன்னமும் முடிவுகளை அறிவிக்கவில்லை. ஆனாலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தான் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், எவ்வாறாயினும் இந்தியா சார்பில் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஏனைய தலைவர்கள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பது உறுதி