அடுத்த மாதம் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று, மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் இலங்கையில் நடக்க உள்ள காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று, தமிழக அரசு முதற்கொண்டு, தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கூக்குரல் எழுப்பாத குறையாக கூறிக் கொண்டு இருக்க மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
மன்மோகன் சிங் கண்டிப்பாக இலங்கையில் நடக்க உள்ள காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுதர்சன நாச்சியப்பன். பிரதமர் கண்டிப்பாக காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்குள்ள தமிழர்களுக்கு சரியான அணுகு முறையில் உதவிகள் சென்றடைகிறதா, என்பதும், மேலும் அவர்கள் தேவை என்ன என்பதையும் இந்தியா கண்டறிய முடியும்.
மேலும், அங்குள்ள தமிழர்கள் பிரதமர் வந்து தங்களை பார்க்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இதை எல்லாம் விட, காமன் வெல்த் மாநாட்டுக்கு இந்தியா சென்றால்தான், ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டை இந்தியாவில் கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையில் நடக்கவுள்ள காமன் வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் கண்டிப்பாக செல்ல வேண்டும்:சுதர்சன நாச்சியப்பன்