Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உட்பட முக்கிய விவகாரங்கள் அடங்கிய இரண்டாது கூட்டு ஒப்பந்தம் கோலாலம்பூரில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மலேசியாவின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் டத்தோ ஹம்சா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அரசியல் ஆலோசனைகள், வர்த்தகம், முதலீடு, உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது, சுற்றுலா, கலாசார விவகாரங்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், பெருந்தோட்டம், கல்வி, பாதுகாப்பு, மனித வளம் அபிவிருத்தி, மத விவகாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் போன்ற விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திவி நெகும திட்டத்திற்கு கொரிய உதவ முன்வந்துள்ளது

திவி நெகும ( வாழ்வின் முன்னேற்றம்) வேலைத்திட்டம் , சிறு கைத்தொழில், தொழிற்நுட்ப துறைகளுக்கு பொருளதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் தென் கொரிய அரசின் உதவி முகவர் அமைப்பான கொய்கா நிறுவனம் அணுசரனை வழங்க முன்வந்துள்ளது.

தற்பொழுது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென் கொரிய கொய்கா நிறுவனத்தின் தலைவர் யங் மெக் கிம், பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அமைச்சில் நேற்று முன்தினம் சந்தித்த போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 25 லட்சம் மக்களை உள்ளடக்கிய திவி நெகும தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதியமைச்சர் இதன் போது கொரிய பிரதிநிதிக்கு விளக்கியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ள அம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபம் கொய்காவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடு இலங்கை சுற்றுலா மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி நிலைமையை மேம்படுத்த பெரும் வாய்ப்பாக அமையும் என யங் மெக் கிம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Responses to மலேசியாவும் இலங்கையும் 2வது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com