Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் நள்ளிரவில் தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி தபால் நிலையங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 

நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலைய வளாகத்திற்கு சென்ற அங்கு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிட்டு தப்பியோடினர். அதேகும்பல் மந்தைவெளியில் உள்ள தபால் நிலையத்தின் மீதும் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
குண்டு வீச்சில் மயிலாப்பூர் தபாநிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஏசி இயந்திரங்கள் சேதம் அடைந்தன. இதேபோல் மந்தைவெளி தபால்நிலையத்திலும் சில கருவிகள் சேதம் அடைந்துள்ளன. இரு இரங்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

மயிலாப்பூர் தபால்நிலையத்தில் இருந்த சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்ததில், 4 பேர் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி உமாபதி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இடங்களிலும் 15 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் ஓரிரு குண்டுகள் மட்டுமே வெடித்துள்ளன. ஆனால் போலீசார் தரப்பில் 4 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதற்கே குண்டு வீச்சு நடைபெற்றதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

0 Responses to சென்னையில் இரு தபால்நிலையங்கள் மீது குண்டுவீச்சு: 2 பேர் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com