Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடைபெறும் “காமன்வெல்த்” மாநாட்டில், இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் வியாழக்கிழமை (அக்.31)  நீதிமன்றம் பணிப் புறக்கணிப்பு செய்யப்போவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயலர் கே.என்.பி. ரகுநாதன் கூறினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை, மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்காத நிலையில், “போர்க் குற்றவாளியாக” இலங்கை அதிபர் ராஜபட்சேவை அறிவிக்கக் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இலங்கையில் நடைபெறும் “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

தற்போது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் தலா 5 நீதிபதிகள் கொண்ட குழுவினரால்  பரிந்துரை செய்யப்படுபவர்கள் தான் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், நடைமுறையில் உள்ள இந்த முறையை மாற்றி, நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகின்றது.

இதனால், நீதித் துறையில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடு அதிகரித்து நீதித் துறைக்கு களங்கம் ஏற்படும். எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 31-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் வழக்குரைஞர்கள்  நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு செய்யவுள்ளோம் என்றார் ரகுநாதன்.

0 Responses to காமன்வெல்த்: புறக்கணிக்க கோரி தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் அக்.31ல் நீதிமன்றப் புறக்கணிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com