Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடலோர காவல் படையினர் குறிவைத்துத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் நமது மீனவர்கள் உயிர் தப்பி வந்துள்ளனர் அவர்களின் வலைகள் படகுகள், நாசப்படுத்தப் பட்டுள்ளன. இலங்கைக் கடற் படையினரால் நமது தமிழக மீனவர்கள் தொடர்ந்து தவிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீதான இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிரதமாரான தாங்கள் இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் ஜெயலலிதா.

0 Responses to இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப் படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்:ஜெயலலிதா கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com