2014ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு திட்டத்தின் முன்னறிவித்தலின் பிரகாரம் மொத்த செலவீனத்தின் 47 வீதமானவை ராஜபக்ஷ குடும்பத்தின் அங்கத்தினர்கள் அங்கம் வகிக்கும் அமைச்சுக்களிற்கே பதிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான தனி நபர் ஒதுக்கீட்டில் மட்டும் 856 கோடி ரூபாவும், மஹிந்த ராஜபக்ஷ- கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சிடம் 25,390 கோடி ரூபாவும், பஷில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 10,600 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகிறது.
இது, அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனத்தில் 47 வீதமாகும் என்று கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொதுநலவாய நாடுகள் அமையத்தில் ஐம்பதிற்கும் அதிகமான நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் தற்போது வரையில் 13 நாடுகள் மட்டுமே மாநாட்டில் பங்கெடுப்பதற்கான உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை விளம்பரப்படுத்துவதற்காக மட்டும் அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடுகிறது. அத்தோடு, புதிய வாகனங்களுக்காக 2.4 பில்லியன் ரூபாவினை செலவிடுகிறது. தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோருகிறது. மாறாக, பொதுநலவாய மாநாட்டை எதிர்க்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டின் மொத்த செலவீனத்தில் 47 வீதம் ராஜபக்ஷ குடும்ப அமைச்சுக்களிடம்; ஐ.தே.க குற்றச்சாட்டு