Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்களின் வரிப்பணத்தில் கட்சி விளம்பரம் செய்து கொள்கிறது அதிமுக என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்திறங்கிய விஜயகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேருந்துகளில் இரட்டை இலை சின்னத்தை அதிமுக அரசு வரைந்து வைத்துக் கொண்டது தவறு தான்.மக்களின் வரிப்பணத்தில் என்றவுடன் அரசு இதை பயன்படுத்திக் கொள்கிறது. இதுவே அவர்களின் கட்சிப் பணம் என்றால் செய்வார்களா?

மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்யும் தமிழக அரசுக்கு, மக்கள் சரியான படம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், டெல்லி வாழ் தமிழர்களின் நலனுக்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது என்றும், ஏற்காடு தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப் படுவார் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to மக்களின் வரிப்பணத்தில் கட்சி விளம்பரம் செய்து கொள்கிறது அதிமுக: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com