கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என்று கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய நாடுகள் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் சிதொலைக்காட்சி (CTV) எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கனடாவின் முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுநவாய மாநாட்டை கனடா புறக்கணிப்பதனூடு, கனடா அதன் 146 வருட ஜனநாயக பண்புகளை வெளிநாட்டினரோடும், உள்நாட்டினரோடும் பகிரும் வாய்ப்புக்களை தவிர்க்கிறது. அத்தோடு, இலங்கை மீதான அழுத்தங்களை செலுத்த வேண்டும் என்றால் மாநாட்டில் பங்கெடுப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனடாவின் பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதையும் அவர் ஞாபகமூட்டினார்.
0 Responses to பொதுநலவாய மாநாட்டில் கனடா பங்குபற்ற வேண்டும்: கனடாவின் முன்னாள் பிரதமர்