Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி பங்காளிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபை 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கலைக்கப்பட்டு, மார்ச் மாதமளவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், வடக்கில் பெருவெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேல் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று மேல் மாகாண சபை எல்லைக்குள் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராஜா, மேல் மாகாண சபையில் போட்டியிடுவது தொடர்பில் உடனடியாக பதிலளிக்க முடியாது. மேல் மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரே தேர்தலில் களமிறங்குவோமா, இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்படும்: த.தே.கூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com