Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாண சபையின் புதிய கட்டிடத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை 8.15 மணியளவில் வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீ மற்றும் வட மாகாண முதலமைசர் விக்னேஸ்வரனும்  இணைந்து திறந்து வைத்தார்கள். காலையில் வட மாகாண சபையின் கட்டிடத்திற்கு முதலமைச்சர் வந்த சில நிமிட நேரத்தில் வருகை தந்த வட மாகாண ஆளுநரை காரில் இருந்து இறங்கியதும் முதலமைச்சர் கைலாகு கொடுத்து வரவேற்றார்.



இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கைலாகு கொடுத்த வரவேற்றார்.
தொடர்ந்து கட்டிடத்தின் வாசலில் இருந்து இணுவில் மத்திய கல்லூரி மாணவ மாணவிகளின் தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய தரை தம்பட்டம் மற்றும் மேளம் முழங்க நடனத்துடன் கட்டிடத்திறக்கு அழைத்து வரப்பட்டார்கள்.


சிங்களத்தின் சிங்கக் கொடியை வட மாகாண ஆளுநர் ஏற்றி வைக்க வட மாகாண கொடியை வட மாகாண முதலமைச்சர் ஏற்றி வைத்தார். அடுத்த கட்டிடத்திற்கான பெயர் பலகையை வட மாகாண முதலமைச்சரும் வட மாகாண ஆளுனரும் இநை;து திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.





0 Responses to வடமாகாண கட்டிடத்தை ஆளுநரும் முலமைச்சரும் இணைந்து திறந்து வைத்தனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com