Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் மாவட்டங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டவர்களின் குரு பூஜையில் அசம்பாவிதம் ஏற்படாமல் கண்காணிக்க ஆளில்லாத விமானம் ஏற்பட்டு செய்துள்ளது தமிழக அரசு

அக்டோபர் 30ம் திகதி பரமக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ஊர்களில் நடக்க உள்ள குரு பூஜையை பதுகாப்பாக நடத்தி கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு இருக்க அங்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க இந்த முறை ஆளில்லாத கண்காணிப்பு விமானம் ஒன்றையும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள் தயாரித்த ஆளில்லாத கண்காணிப்பு விமானத்தையும் பாதுகாப்புக்கு இயக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தரையில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ஆளில்லாத கண்காணிப்பு விமானம் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தரையில் நடப்பவைகளை கண்காணிக்கும் என்றும், அதன் சோதனை ஓட்டத்தை இன்று தொடங்கியுள்ளது காவல் துறை.

0 Responses to தென் மாவட்டங்களில் நடக்கும் குரு பூஜையை கண்காணிக்க ஆளில்லா விமானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com