மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகர எல்லைக்குள் அமைந்திருந்த மகா
பத்திரகாளி அம்மன் ஆலயத்தை பாதுகாப்பு தரப்பினரே இறுதியாக உடைத்து அழித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மீது ஒரு வருடத்துக்கும் மேலாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இறுதியாக பாதுகாப்பு தரப்பினராலேயே அழிக்கப்பட்டுள்ளது. நாடு பூராவும் நகர அமைப்பு கட்டுமான வேலைகளை செய்துவரும் பாதுகாப்பு தரப்பினர் கட்டிடங்களை உடைக்கும் இயந்திரத்தினைக் கொண்டு அந்தப்பாவ காரியத்தை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்கள் மத நம்பிக்கைகளின் மீது அச்சுறுத்தல் விடுக்கும் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலய உடைப்பு நல்லதொரு உதாரணம். பொதுநலவாய நாடுகள் இன்னமும் இரண்டு வாரங்களின் கொழும்பில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசாங்கம் நடந்துள்ளது. குறித்த ஆலய அழிப்பு தொடர்பில் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்குள் அறித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வருவரேயானால், அவர் தம்புள்ளை சென்று உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட வேண்டும். அவரோடு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூனும் சென்று பார்வையிட வேண்டும் என்று மனோ கணேசன் மேலும் வேண்டிக்கொண்டுள்ளார்.
தம்புள்ளை நகரத்தை பௌத்த புனித பூமியாக நகர அபிவிருத்தி அமைச்சு அண்மைக்காலத்தில் பிரகடனப்படுத்தியது. அதனையடுத்து, அந்த எல்லைக்குள் வரும் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத வழிபாட்டு இடங்களை அகற்றுவதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தம்புள்ளை பத்திரகாளி அம்மன் ஆலயத்தை பாதுகாப்பு தரப்பினரே அழித்துள்ளனர்: மனோ கணேசன்