சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (International Federation of Journalists) ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்மேளனத்தின் ஊடகவியலாளர்கள் இருவர் இலங்கைக் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் (Free Media Movement) ஏற்பாட்டில் கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டபோதே அவர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
கொழும்பு ஜானகி விருந்தினர் விடுதியின் இன்று காலை குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வந்த பத்துக்கும் மேற்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமையவே சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் சுற்றுலா விசா அனுமதிப் பத்திரத்தின் மூலம் இலங்கைக்குள் நுழைந்து தொழில்முறை பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொண்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

0 Responses to சர்வதேச ஊடகவியலாளர்கள் இருவர் கொழும்பில் கைது