உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் போலவே நாமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளோம்.
அதை தற்போது சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்று இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவரான பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெற வேண்டும் என்பது சர்வதேசத்தின் விருப்பம். அதன் காரணமாகவே இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறுகின்றது. அதனால், சர்வதேச நாடுகள் இலங்கை மாநாட்டினை புறக்கணிக்கும் வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், இந்தியாவின் பிரதமர் புறக்கணிக்க தீர்மானித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படும். ஏனெனில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் தலைவர் மாத்திரமல்ல, ஆசியாவின் தலைவர் என்று பிரசாத் காரியவசம் கூறியுள்ளார்.
இந்தியா தன்னுடைய முடிவுகளை எடுக்கின்ற போது பிராந்திய அரசியலமையும் கருத்திற்கொண்டு எடுக்க வேண்டும். அதுவே, சரியாகவும் இருக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனாலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வது தொடர்பிலான உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோம், அதை சரிசெய்ய முயற்சிக்கிறோம்: பிரசாத் காரியவசம்