ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை தடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் டிச.10ம் திகதி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்காக இதுவரை புலனாய்வுத் துறையினர் மற்றும் மத்திய அரசு அமைத்த விசாரணைக் குழுவினர் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் ஆனால் இதுவரை விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும் பேரறிவாளன் வழக்கறிஞர் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில் :
ராஜீவ் காந்தி கொலை வழக்கை கடந்த 14 ஆண்டுகளாக சிபிஐ ஐறப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இந்த அமைப்பின் விசாரணை காலதாமதம் ஆவதால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த விசாரணை முறையாக நடைபெற்றால் ராஜீவ் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளியேவரும்.
சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை சரியாக நடைபெறவில்லை.
இதுவரை விசாரிக்கா தவர்களை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழுவை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அந்த விசாரணையை துரி தப்படுத்தவும், உண்மைகளை கண்டுபிடிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று தடா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, மனு மீதான தீர்ப்பு 10ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் பல்நோக்கு விசாரணை முகமையின் இயக்குனர், 2 இணை இயக்குனர்கள், டி.ஐ.ஜி மற்றும் 5 எஸ்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை ரகசியமாக மூடிய உறைகளில் வைத்து நீதிமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ராஜீவ் கொலை வழக்கு விசாரணை : இதுவரை ரூ.100 கோடி வரை செலவு?