சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறன் அவர்களை ஆதரித்து பிரச்சாராம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை சேலம் புறநகரில் உள்ள அயோத்தியபட்டணம், மாசிநாயக்கன் பட்டி, கக்கன்காலனி, மேட்டுப்பட்டி, தாதனூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, நேற்று இந்த பகுதிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா உங்களிடம் பேசும்போது, இல்லை, இல்லை... காகிதத்தில் டைப் செய்யபட்டிருந்த வாசகங்களை திறந்த வாகனத்திலிருந்தபடியே மக்களிடம் படித்து காட்டிவிட்டு சென்றார்.
அவர் படித்துக்காட்டிய செய்தியை இன்றைய செய்திதாள்களில் வெளியிட்டிருந்தார்கள், அதை நானும் படித்துப்பார்த்தேன், அதில், இந்த ஏற்காடு தொகுதி அதிமுகவின் கோட்டை என்று சொல்லியிருந்தார்.
நானும் சொல்கிறேன், இது திமுகவின் கோட்டை, 1967-முதல் இந்த தொகுதியில் திமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது, என்று வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு காட்டினர்.
இந்த முறையும், இந்த தொகுதியிலே நம்முடைய வேட்பாளர் மாறன் மீண்டும் வெற்றி பெறப்போகிறார். இப்போது, தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், திமுக அரசும்தான் காரணம் என்று ஜெயலலிதா நேற்று படித்துள்ளார்.
நான், சொல்கிறேன், இப்போது, ஏற்ப்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு இந்த ஜெயலலிதா அரசுதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக வடசென்னையில் இரண்டு புதிய அனல் மின் திட்டங்களின் மூலம், 1200, மெகா வாட் மின்சாரமும், மேட்டூர் அனல் மின் திட்டத்தில் 600, மெகா வாட் மின்சாரம் என மொத்தம் 1800, மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மூன்று திட்டங்கள் ரூபாய் 2250, கோடி செலவில் கொண்டுவரப்பட்டது.
அந்த திடங்களை எல்லாம் ஜெயலலிதா இப்பொது கிடப்பில் போட்டு விட்டார். அதேபோல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம் மாற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் தமிழகஅரசும் கூட்டாக சேர்ந்து 22,000, கோடி ரூபாய் முதலீட்டில், 6000 மெஹா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தையும் இப்போது, ஜெயலலிதா கைவிட்டு விட்டார். இதனால்தான் தமிழகத்தில் இப்போது, பத்து மணிநேரம் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல. சென்னை மதுர வாயிலில், மாநகர போக்குவரத்தை சரிசெய்ய கொண்டுவரப்பட்ட பறக்கும் பாலம் திட்டத்தையும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். தமிழகத்துக்கு மட்டுமல்ல. இந்த நாட்டுக்கே பலவகையிலும் பயன்தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்த இந்த ஜெயலலிதா நீதிமன்றத்துக்கே போனவர்.
இப்படி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு என போடப்பட்ட பல திட்டங்களை நிறுத்தி வைத்த ஜெயலலிதா, இந்த பகுதியில் உங்களுக்கு கூட்டுறவு வங்கியின் கிளை, அரசு கலை அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவமணை போன்றவற்றை கொண்டு வருவதாக இந்த பகுதி மக்களிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
நான் நிச்சயமாக சொல்கிறேன், கண்டிப்பாக இந்த திட்டங்களை செயல்படுத்தமாட்டார். ஆனால், நாங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் ஒட்டுக்கேட்டு வரவில்லை, உங்களில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுக்கான வேண்டிய வேளைகளில் நான் இந்த பகுதிக்கு வந்துள்ளேன், இனிமேலும், கண்டிப்பாக வந்து செல்வேன், ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் பல மக்கள் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசு திட்டங்களை பட்டியலிட்டார்.
முந்தைய திமுக அரசு பல மக்கள் நலத்திட்டங்களை செய்திருந்த போதும் மக்கள் மாற்றத்தை விரும்பி அதிமுகவுக்கு வாக்களித்து விட்டார்கள். மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு இப்போது, ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. எனவே, இந்த தொகுதிக்கு நடக்கும் இடைதேர்தலில் நீங்க திமுக வேட்பாளர் தம்பி மாறனுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று பேசினார்.
சேலத்திலிருந்து, ஆத்தூர் போகும் வழியில் உள்ள பல ஊர்களில் ஸ்டாலின் மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். மொத்தம் இருபது இடங்களில் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் பேசிய எல்லா இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.

0 Responses to மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார் ஜெயலலிதா: மு.க.ஸ்டாலின் பேச்சு