Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேஸ்புக் சமூக வலைதளத்தில் சிறுவன் ஒருவன் தனது கணக்கிற்கு.மோசமான கருத்தை அனுப்பியதால் மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை கண்டிவிலியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை தனது பெட்ரூமில் படித்து வந்தார். அவரது அம்மா கதவை தட்டியபோது உள்பக்கமாக பூட்டியிருந்தது தெரிந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக தட்டிபோது திறக்கவில்லை.

இதனால் பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் கதவை உடைந்து உள்ளே பார்த்த போது அச்சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் தங்கள் பெண்ணிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவளது பேஸ்புக் கணக்கிற்கு ஒருவன் மோசமான கருத்தை அனுப்பி இருந்தான் இதன் காரணமாக அவள் கடும் மனஉளைச்சலில் இருந்தாள்.

மேலும் இதுகுறித்த நாங்கள் உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்தநிலையில் அவளுக்கு மீண்டும் மோசமான கருத்து வந்துள்ளது. இதன் காரணமாக அவள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to பேஸ்புக்கில் மோசமான கருத்து: 14 வயது சிறுமி தற்கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com