Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண எல்லைக்குள் இருக்கும் வளமான அரச காணிகளை  மத்திய அரசாங்கம் வனப்பிரதேசமாக வர்த்தமனியின் மூலம் அறிவித்து மறைமுகமாக கையகப்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய அரசாங்கத்தி்ன் தன்னிச்சையான செயற்பாட்டின் மூலம் கிழக்கு மாகாணத்திற்குரிய பெருமளவு காணிகள் வனப்பிரதேசமாக மாற்றப்பட்டு, பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு  மாவட்டத்தில் மட்டும் கிரான், வவுணதீவு  உள்ளிட்ட பிரதேசங்களில் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஏக்கர் அரச காணிகள் வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவிருப்பதாக  மத்திய அரசாங்கத்தின் வனத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வனப்பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் காணிகள் தொடர்பில் மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ எந்தவித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ள இரா.துரைரெத்தினம், குறித்த விடயம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தி மாவட்டச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பி.பி.சியிடம் கூறியுள்ளார்.

வனப்பிரதேசம் என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், வயல் நிலங்கள், சிறு தானியச் செய்கை நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களும் அடங்குகின்றன. இதன் காரணமாக மாகாண சபையினால் இதுவரை காலமும் நிர்வகிக்கப்பட்டுவந்த குறித்த காணிகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாணத்தின் காணிகளை மத்திய அரசாங்கம் மறைமுகமாக கையகப்படுத்துகிறது: த.தே.கூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com