தமிழ்நாடு அரசு சிறீலங்கா அரசின் இராணுவப் பயிற்சிகளை எதிர்த்து ஒரு
சிறீலங்கா எதிர்ப்புநிலையை உருவாக்கியது. கடந்த மார்ச் மாதம் இந்தியப்
பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளிற்கு சிறீலங்காவின்
சிங்கள விளையாட்டு வீரர்கள் வருவதை தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்துப்
பேராட்டங்களை நடாத்தினார்கள்.
அந்த வேளை ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகளையும் இன்றும் அவர்கள் கடுமையான சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்குள் வாழ்வதை எதிர்த்துப் போராடிய தமிழகத் தமிழர்களைக் கடுமையாக விமர்சித்து ‘நான் தமிழனாக இருக்கலாம். ஆனாலும் முதலில் நான் சிறீலங்கன். சிங்கள வீரர்களை எதிர்த்தால் அது எனக்குமான எதிர்ப்புத்தான். போர் முடிந்த பின்னர் சிறீலங்காவின் முழுப்பகுதியுமே மிகவும் அமைதியாக உள்ளது. இங்கு தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். அவர்கள் மிகவும் நன்றாக சமஉரிமையுடனே நடாத்தப்படுகிறார்கள்’ என்று சிங்கள இனவாத அரசின் ஊதுகுழலாகத் தமிழன் என்ற போர்வையில் உலவும் சிங்களத் தமிழன், சிங்களத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தன் இனத்தைப் பணத்திற்காக வித்திருந்தார்.
இப்படியான துரோகத் தமிழனுக்கு இன்று தமிழர்களின் பணத்தில் தம்மை உலகக் கோடீஸ்வரனாக மாற்றியிருக்கும் தொலைபேசி நிறுவனமான ‘லைக்காமொபைல்’ பிரித்தானியாவின் ஆசியாவிற்கான நன்கொடை நிறுவனம் ஊடாக இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் பவுன்ஸ்களை வழங்கி உள்ளது. இது கிட்டத்தட்ட 52 மில்லியன் சிறீலங்கா ரூபாய்கள். இது நன்கொடைகளிற்காகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இவரது சிங்கள விசுவாசத்திற்காகக் கொடுக்கப்பட்ட பணமாகவே இப்பணம் சென்றடைந்துள்ளது.
இதற்கு மேலும் விசுவாசமாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரூன் அவருடன் நட்புரீதியாக துடுப்பாட்டம் விளையாடியபோது ‘தமிழ் மக்கள் தொடர்ந்தும் இன்னல் படுவதாகவும் அரசாங்கத்தின் நிவரண மற்றும் நீதி வழங்கும் முறைமைகள் சீரடையவில்லை’ என்றும் முரளிதரனிடம் தமிழன் என்ற ரீதியில் கமெரூன் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அந்தக் கருத்தைக் கூடத் தாங்கமுடியாத இந்த சிங்கள விசுவாசத் தமிழன் முத்தையா முரளிதரன் ‘கமெரூன் மிகவும் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளார். அவர் பிரித்தானியாவில் இருந்து வந்தவர். அவருக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாது. எனக்கு இங்கு நடப்பது தெரியும். இங்கு முன்னேற்றங்கள் நடந்தே உள்ளது’ என்று குமுறியுள்ளார். தழிழர்களிற்கு சர்வதேசம் நீதி வழங்க முற்பட்டாலே கூட அதைத் தடுக்கத் துடிக்கும் இந்த தமிழனுக்கு(?) லைக்கா குழுமம் நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்னதாகவே ‘லைக்காமொபைல்’ நிறுவனம் தனது போத்துக்கல் கிளையினுடாக இனப்படுகொலைக் குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் மருமகனான ஹ்மால் லலிந்த ஹெட்டியாராச்சியின் பெயரிலுள்ள சிறீலங்காவின் வயர்லெஸ் சேவை வழங்கும் நிறுவனத்தின் 95 சதவீதப் பங்குகளைக் கொள்வனவு செய்து அதன் மூலம் மாபெரும் தொகைப்பணத்தை அவர்களிற்குக் கைமாற்றி உள்ளது.
இதன் மூலம் சிங்கள் இனவெறி அரசுடன் தனது கைளை இறுக்கக் கோர்த்துக் கொண்ட இவர்கள், அடுத்த கட்டமாக சிங்கள அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்குடன் சிறீலங்கன் விமான சேவையுடன் கைகோர்த்துத் தமது LYCAFLY நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். தமது பயண சேவையின் விருப்பம் மிக்க முக்கிய பங்காளியாக சிறீலங்கா விமான சேவையினைக் குறிப்பிட்டுள்ளதுடன், அதனை உபயோக்கிக்கும்படி அதீத விளம்பரமும் செய்து வருக்கின்றனர். தமிழர் நிறுவனமான லைக்கா குழுமம் தமிழின அழிப்பாளர்களுடன் கைகோர்த்து நிற்பது பெரும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும். போர்க்குற்றவாளியும் இன்படுகொலையாளனுமான ராஜபக்ச பிரித்தானியா வந்தபோது கொதித்தெழுந்த பிரித்தானியத் தமிழர்கள் ராஜபக்சவைத் துரத்தி அடித்தனர். இந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்து அவமதித்து விட்டு அங்கேயே தளம் அமைத்துக் கொண்டிருக்கும் லைக்காக் குழுமம் அதே ராஜபக்சவுடன் முதலீடுகளைச் செய்கின்றது. லைக்கா பிளை (LYCAFLY) நிறுவனம் மூலம் பல உல்லாசச் சுற்றுலாக்களை உருவாக்கி வெளிநாட்வர்களிற்குச் சிறீலங்கா ஒரு சொர்க்கபுரி போல் இவர்கள் காட்ட முயல்கின்றார்கள். தமது சுற்றுலாப்பயணங்களைச் சிங்களப் பகுதிகளிற்குள் மட்டுமே உருவாக்கி அது சிங்களவர்கள் மட்டுமே வாழும் பூமி போலவே காட்டிக்கொண்டு தமிழினப் படுகொலைகளையும் தமிழ் மக்களின் அவலநிலையையும் தமது வியாபரப் போர்வையால் மறைக்கின்றார்கள். இதன் மூலம் மில்லியன் கணக்கான அந்நியச் செலவாணிகளைச் சிறீலங்கா அரசாங்கம் பெற வழிவகுக்கின்றார்கள்.
சிறீலங்கா அரசாங்கம் தன்னை ஒரு அமைதியான நாடாகக் காட்டிக் கொண்டு உலகத்தின் முதலீடுகளைப்பெற்று தன்னை வளர்த்துக் கொண்டு தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் நோக்கில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகப் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டையும் அதன் முக்கிய அங்கமான முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டினையும் நடாத்தி வருக்கின்றது. இம்மாநாட்டின் மூலம் பாரிய வர்த்தக முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேசங்களின் அழுத்தங்களையும் சர்வதேச நீதி விசாரணைகளையும் தூக்கி எறிந்து விடமுடியும் எனச் சிறீலங்கா கணக்குப் போட்டுள்ளது.
இந்த மகாநாடு இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளியும் மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்த நாடான சிறீலங்காவில் நடப்பதை எதிர்த்துச் சர்வேதேசமெங்கும் தமிழ் மக்கள் கொதிநிலையில் இருக்கத் தமிழகத் தமிழர்கள் பெரும்போராட்டங்களை நடாத்தியும் உயிர்களைத் துச்சமென மதித்துத் தீக்குளித்துப் போராடியும் வந்தனர். சர்வதேச ஊடகங்கள் சிறீலங்காவின் படுகொலைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டுச் சிறீலங்காவிற்கு அரச தலைவர்கள் செல்வது கூடாது என்று வற்புறுத்தி வந்தனர். கனடா, மொரிசியஸ் போன்ற அரசாங்கங்கள் முற்றாக இனப்படுகொலை நாட்டில் நிகழும் மாநாட்டைப் புறக்கணிக்க தமிழக மக்களின் பேராட்டங்களிற்குப் பயந்து அடுத்த தேர்தலைக் கருத்திற்கொண்டு இந்தியப் பிரதமர் தான் போகாது அமைச்சர்களைச் சிறீலங்கா அனுப்பி வைத்தார்.
அண்மையில் உலக நெஞ்சங்களை உருக்கிய சிறீலங்கா இராணுவத்தின் இசைப்பிரியாவின் படுகொலை தமிழ் நெஞ்சங்களை எல்லாம் எரிமலையாயக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கத் தெனாவெட்டாக ராஜபக்ச பொதுநலவாய மாநாட்டை நடாத்தினார். ஊடகச் சுத்தந்திரத்தைத் துப்பாக்கி முனையில் வைத்துவிட்டு நடாத்திய மாநாட்டிற்குச் சில நிறுவனங்கள் பெரும் தொகையான பணத்தை ராஜபக்சவிற்கு வழங்கி அவரை ஊக்குவித்துள்ளன. இதற்கொல்லாம் தலைமை வகித்து மகிந்த ராஜபக்சவின் மாநாட்டு நன்கொடையில் பிரதான நன்கொடையாளருக்கு அடுத்ததாகத் தங்க நன்கொடையாளர் (Golden Sponser) என்ற நிலையில் பாரிய பணத்தை வாரி இறைத்திருப்பது இந்த லைக்கா குழுமமே. இதைவிடக் கொடுமையாக யாராலும் தமிழனின் முதுகில் குத்தி விட முடியாது.
இன்று தமிழ் மக்கள் பெரிதும் வாங்கி உபயோகிக்கும் லைக்கா அட்டைகளின் பணம் தமிழர்களின் இனப்படுகொலையை மூடிமறைக்கும் புதைகுழிகளைத் தோண்டுவதற்கு மகிந்த ராஜபக்ச கைகளிற்குச் செல்கின்றது. இதன் மூலம் நாம் எல்லாரும் கூட எமக்கான புதைகுழிகளைத் தோண்டுவதற்குப் பங்களித்திருக்கின்றோம் என்பதை உணரமுடிகின்றதா?
இதே போலவே இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊடாக இந்தியாவின் சேரி வாழ் இளைஞர்களின் மேம்பாட்டுக்கான நிதி என்று உதவி வழங்கி இருக்கும் இந்தக் குழுமம் அவர்கள் வழியில் புலம்பெயர்வாழ் மக்களின் போராட்டங்களை நசுக்க எடுக்கும் தங்கள் முயற்சிகளில் இறங்கியும் உள்ளனர். கடந்த கரும்புலிநாள் நிகழ்வுகள் புலம்பெயர் தேசம் எங்கும் நடக்கும் நாளில் கடந்த யூலை 6 இல் இந்தியாவிலிருந்து களமிறங்கிய மானாட மயிலாட நிகழ்வின் இறுதி நிகழ்வைத் தனது பேராதரவில் இலண்டன் மாநகரில் நடாத்திப் பொருமளவான மக்களை அதன்பால் ஈர்த்து கரும்புலி நாள் நிகழ்வுகளைத் திசை திருப்பித் தனது கடமையை ஆற்றியிருந்தது இந்தக் குழுமம்.
பிரித்தானியாவில் நாட்டிற்குரிய வருமான வரிகள் செலுத்தாது, அரசியற் கட்சிகளிற்கு கையூட்டாக நன்கொடைகள் கொடுத்து முறைகேடான நிறுவனத்தை நடாத்திவரும் இந்தக் குழுமம் பற்றி பிரித்தானியப் பத்திரிகைகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. இதேபோல் வரிமோசடி செய்த லைக்கா மொபைலின் நோர்வேக்கிளை சிலநாட்களில் அரசாங்கத்தால் மூடப்படுகின்றது.
இந்தியாவின் பிரதான செல்பேசி மற்றும் இணையச் சேவைகளான எயார்டெல், எயார்செல், ரிலையன்ஸ் மற்றும் அரச சேவைகளான பி.என்.எஸ்.எல் மற்றும் பல சேவைகளின் முக்கிய இணையத்தள மற்றும் செல்பேசிச் சேவைகளின் சேவை வழங்குநராக ஹவாய் நிறுவனம் இருக்கின்றது. இந்தச் சேவை வழங்குநர் நிறுவனம் சீனாவின் மாபெரும் நிறுவனமாகும். இது தனது சேவை வழங்களினுடாகச் சுலபமாக இந்தியாவின் தொடர்புகளை உளவு பார்க்க முடிகின்றது. இந்தியாவின் அனைத்துத் தகவல்களையும் தொலைபேசித் தகவல்கள் மூலம் இலகுவாகப் பெறுகின்றது. இந்த உளவின் அடிப்படையிலேயே சிறீலங்காவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 95 வீதப் பங்குகளை வாங்கிய லைக்காக் குழுமத்தின் சிறீலங்கா அரசின் தொடர்புகள் மூலம் மிக இலகுவாகப் புலம்பெயர் தமிழர்கள் உளவு பார்க்கப்படக் கூடும்.
இங்கு இருக்கும் உறவுகள் அங்கு இருக்கும் தமது உறவுகஞடன் பேசும் விடயங்கள் அங்கு இராணுவப் புலனாய்வாளர்களின் தகவல் மையத்திற்குச் செல்வதுடன் அங்கிருக்கும் உறவுகளிடம் பணம் பறிக்கவும் அவர்கள் மீதான அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் இந்தத் தொடர்பாடல்கள் பயன்படும். அத்தோடு இங்கு இருக்கும் மக்கள் தமது உறவுகளிற்குப் பணம் அனுப்பி விட்டு அதனை இக்குழுமத் தொலைபேசி மூலம் அங்கு அறிவிக்கும் போது அந்தத் தகவலும் சிறீலங்கா அரசிற்குச் செல்லக் கூடிய அபாயமே உள்ளது.
இதனால் புலம்பெயர் தேசத்திலுள்ள உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன் உங்கள் உறவுகளின் தகவல்களும் சேகரிக்கப்படும். நீங்கள் அழைக்கும் தொலைபேசிகளில் உங்கள் உறவுகள் பேசும் சில அரசியல் செய்திகள் கூட அவர்களிற்கு ஆபத்தாக முடியும். உங்கள் சிம் அட்டைகள் கூடப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படும் அபாயமும் உள்ளது.
எனவே இது குறித்த அவதானங்கள் மக்களிற்குத் தேவை. உல்லாசப்பயணம், மகிந்தவிற்கான பொதுநலவாயநாடுகளின் முதலீடுகள், தொலைபேசி நிறுவனங்களின் பங்கீடுகள் ஊடான உளவுகள், சிறீலங்கா விமானசேவைகளின் பங்குதாரர்கள் ஆகிய செயல்களைத் தமழினத்திற்கு செய்து தமிழனத்தின் பணத்திலேயே தமிழனுக்குக் குழிபறிக்கும் இப்படியான நிறுவனங்கள் குறித்துத் தமிழர்கள் விழிக்க வேண்டிய தருணம் இது.
நன்றி: ஈழமுரசு

0 Responses to எங்கள் பணமே எங்கள் புதைகுழிகளாய்...! - சோழ.கரிகாலன்