ஈழத்தில் நடந்த போரின் உயிரிழப்புகள் ஏற்படுத்திய வலி ஒருபக்கம். சிதைந்துபோன உறவுகள் சொல்லும் வலி இன்னொரு பக்கம் என, மனதை ஒவ்வொரு நாளும் உலுக்குவதாக உள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத பிரிவுகள் சோகக் கதைகளைச் சொல்லியபடி உள்ளன.
ஈழத்தில் போர் தொடங்கிய போது, ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அப்படி அகதியாக வந்த புஷ்பராணியின் கணவர் சேவியர், இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் தவறவிட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிள்ளைகள் புஷ்பராணியுடன் சேர்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் கல்நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.
புஷ்பராணி தெரிவித்ததாவது,
இலங்கையில் 1990-களில் போர் தொடங்கி பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது. அதனால், ஏராளமானோர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இனிமேலும் இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை. 1996-ல் சவூதிக்குப் போனேன்.
மகன்கள் தினேஷ், டெனிஷ், மகள் திராணி, கணவர் சேவியர் ஆகியோர் தமிழ்நாட்டுக்குப் போனாங்க. அப்போ பெரியவனுக்கு ஏழு வயசு. மகளுக்கு ஐந்து. சின்னவனுக்கு இரண்டு வயசு. அதற்குப்பிறகு அவங்ககூட தொடர்பே இல்லை.
எனக்குத் தமிழ்நாட்டில் யாரையும் தெரியாது. சவூதியிலும் பல நெருக்கடிகள் இருந்ததால மீண்டும் இலங்கைக்கே திரும்பிவிட்டேன். என் பிள்ளைகளையும் கணவரையும் கண்டுபிடிக்கணும்னு இந்தியா செல்ல விசா கேட்டேன். கிடைக்கவில்லை.
17 வருஷமா தவிச்சுக்கிட்டு இருந்தேன். கணவருடன் சென்ற அவரது நண்பர் ஒருவரை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவர் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கிறவர். என் கணவர் இறந்து விட்டார் என்றும் குழந்தைகள் 'உதவும் கரங்கள்’ என்ற அமைப்பில் வளர்கின்றனர் என்றும் தகவல் சொன்னார்.
கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி சென்னைக்கு வந்தேன். என் பிள்ளைகளைக் கண்டுபிடித்தேன். நான் பெற்ற மூன்று செல்வங்களைப் பார்க்காமலேயே என் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று நரக வேதனை அனுபவித்தேன். பிள்ளைகளைப் பார்த்ததும்தான் எனக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை பிறந்தது.
இந்தியாவில் இருந்து என் பிள்ளைகளை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கும் விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட மூன்று மாத விசாவும் முடிவடைந்ததால் அக்டோபர் 2-ம் தேதி இலங்கை சென்றுவிட்டேன்.
லயன்ஸ் கிளப் மூலமாக கடைசிப் பையனும் மகளும் மட்டும் இலங்கைக்கு வந்துவிட்டனர். பெரியவன் தினேஷ் மட்டும் சென் னையில் வேலை பார்க்கிறான். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்தான் சென்னையில் இருந்து வவுனியா வரை கொண்டுவந்து விட்டாங்க.
இப்பவும், எதிர்காலம் பத்தி எதுவும் புரியாமத்தான் இருக்கோம். தமிழ்நாட்டுல இவ்வளவு ஆண்டுகளாக என் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். எங்கள் வாழ்க்கை இனிதான் ஆரம்பம்'' என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
அவரது மகள் திராணி கூறியதாவது,
, ''அப்பாகூட நாங்க சென்னைக்கு வந்தப்போ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது ஞாபகம் இருக்கு. நாங்க மூணு பேரும் ரயில்ல இருந்தோம். சாப்பாடு வாங்க அப்பா மட்டும் இறங்கிப் போனாரு. கொஞ்ச நேரத்தில் ரயில் கிளம்பிடுச்சு. அப்பாவைக் காணோம். மூன்று பேரும் அழுதுட்டே ஆவடியில இறங்கிட்டோம்.
பிளாட்பாரத்துலயே தங்கி இருந்தோம். இதைப் பார்த்த ஒருவர், எங்களை விக்கிறதுக்கு திட்டம் போட்டிருக்கார். அண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சிருக்கு. அங்க இருந்து தப்பிச்சு ஓடி வந்ததுகூட எனக்கு ஞாபகம் இருக்கு.
ரிக்ஷாக்காரர் பாபுன்னு ஒருத்தர் எங்களுக்கு உதவி செஞ்சாரு. எங்க அண்ணன் நிறைய ஹாஸ்டலுக்குப் போயி இடம் கேட்டாரு. எந்த ஹாஸ்டல்லயும் சேத்துக்கல. முரளின்னு ஒருத்தருதான் எங்களை 'உதவும் கரங்கள்’ இல்லத்துல கொண்டுபோய் சேர்த்துவிட்டாரு.
எங்களைத் தேடிதேடிப் பார்த்துட்டு அந்த வேதனையிலயே எங்க அப்பா இறந் துட்டாருன்னு பேப்பர்ல வந்த செய்தியை ரொம்பநாள் கழிச்சுதான் பார்த்தோம். அஞ்சாம் வகுப்பு படிக்க புரசைவாக்கம் கெல்லீஸ்ல ஒரு ஸ்கூல்ல சேர்த்தாங்க.
அதுக்கப்புறம் மரியா செல்வி ஹோம்ல என்னைத் தத்தெடுத்துக்கிட்டாங்க. அண்ணனும் தம்பியும் வேற ஹாஸ்டல்ல இருந்தாங்க. அதன் பிறகு, மூணு பேருமே ஒண்ணாதான் தங்கி இருந்தோம். இந்த மாசம் 8-ம் தேதி வவுனியாவுல இருக்குற அம்மாகிட்ட வந்து சேர்ந்துட்டேன். இப்ப எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்'' என்றார் உற்சாகத்துடன்.
பிரிந்தவர் மீண்டும் இலங்கைக்குச் செல்ல உதவியாக இருந்த சென்னை அரிமா சங்கத் தலைவர் சாதிக் பாட்ஷா,
இங்க இருந்து இவங்க இலங்கை செல்ல உடனடியாக சான்றிதழை வாங்கிக் கொடுத்தோம். இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டத்துக்குச் செல்ல, டிக்கெட் செலவு முழுவவதையும் ஏற்றுக்கொண்டோம். பிரிந்து திண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குடும்பம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்தது எங்களுக்குப் மிகப் பெரிய மகிழ்ச்சி'' என்றார்.
இன்னும் எத்தனைக் குடும்பங்களோ... எத்தனை சோகங்களோ...!

0 Responses to எங்கள் வாழ்க்கை இனிதான் ஆரம்பரம்! 17 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த ஈழக் குடும்பத்தின் சோகக் கதை