Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 69 பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இனங்காணப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க, இலங்கையில் மொத்தமாக 337 பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கான 159 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில், 60 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்படுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகிய முதல் நபர் 1989 ஆம் ஆண்டு இனங் காணப்பட்டார். அதிலிருந்து இதுவரையில் 1808 பேர் மொத்தமான இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில், 95 வீதமானவர்கள் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமும், 4 வீதமானவர்கள் தாயின் கற்பத்திலிருக்கும் போதும் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை நாளை டிசம்பர் 1 ஆம் திகதி உலக எயிட்ஸ் விழிப்புணர்வுத் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 337 பேர் உயிரிழப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com