தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 59வது அகவை தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது.
சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபூர்க் போறூம் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் 59வது அகவைநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் தமிழின உணர்வாளர் ஓவியர் திரு.வீரசந்தானம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்தோடு இன்று ஆரம்பமாகும் தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்டு எமது தேசத்தின் வீரப் புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

0 Responses to தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 59வது கொண்டாட்டங்களில் சுவிஸ் வாழ் தமிழின உணர்வாளர்கள்