Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதில் 4 முறை கொமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. 2 முறை அதில் அவர் பங்கேற்றுள்ளார். தற்போது இலங்கையில் நடைபெறும் மாநாட்டிற்கு தமிழர்களின் உணர்வை மதித்து செல்லவில்லை என கபட நாடகம் ஆடுகிறார். என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 திண்டுக்கல்லில் இன்று காலை கலந்துகொண்ட நிகழ்விற்கு வந்து சீமான்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மீது 5 பிரிவின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிடம் பேசினேன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த இடிப்பு சம்பவம் குறித்து முதல் நாளே ஆட்சியாளர்களுக்கு தெரியும். சட்ட சபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு மறுநாள் அதிகாலையில் நினைவு முற்றம் சுவர் இடிக்கப்பட்டது அநாகரீக செயல்.

இதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளது. இதன்மூலம் தமிழ் உணர்வை சிதைக்க முடியாது.

முன்பெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஈழப்பிரச்சினை குறித்து பேசுவார்கள். ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஈழப்பிரச்சினை குறித்து பேசாமல் எந்த கட்சியினரும் அரசியல்  நடத்தமுடியாது.

பிரதமர் மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதில் 4 முறை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. 2 முறை அதில் அவர் பங்கேற்றுள்ளார்.

தற்போது இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு தமிழர்களின் உணர்வை மதித்து செல்லவில்லை என கபட நாடகம் ஆடுகிறார். ஏற்கெனவே அவர் 2 முறை காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ெ

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசு உதவி செய்துள்ளதாக விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இது ஏமாற்று வேலை.

சனல் 4 டி.வி.யின் இயக்குனர் வவுனியா பகுதிக்குள் நுழைந்த போது ராஜபக்ச தூண்டுதலின் பேரில் அவரை சிங்கள வெறியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்போது ஈழத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. ராஜபக்ச ஈழ மக்களுக்கு நல்லது செய்திருந்தால் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் செல்லாதது கபட நாடகம்! சீமான் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com