Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2015 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் போட்டியிட உள்ளார்.

ஹாரோவில் பிறந்து வளர்ந்த தன்னார்வ வானொலி ஊழியரான தமிழ்ப் பெண்ணொருவரை தொழிற்கட்சி தேர்தலில் போட்டியிட தெரிவு செய்துள்ளது.

உமா குமரன் என்ற இந்த பெண்ணை ஹாரே கிழக்கு தொகுதியின் வேட்பாராக தொழிற்கட்சி தெரிவு செய்துள்ளது. இவர் பொப் பிளக்மேன் எம்.பி.யை எதிர்த்து போட்டியிட உள்ளார்.

உமா குமரன் ஹாரோ மேற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ்க்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் நோர்த் விக் பார்க் ஹொஸ்பிடல் வானொலியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

27 வயதான உமா தெரிவிக்கையில்,

எனது பெற்றோர் 30 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்த அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தமது வாழ்க்கையை கட்டியெழுப்பியதாக குறிப்பிட்டார்.

0 Responses to பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com