Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.குடாநாட்டில் தமிழீழ மாவீரர் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை இன்றும் நாட்டியுள்ளதுடன், இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு மரக்கன்று நாட்டியுள்ளார்.

குடாநாடு முழுவதும் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் செய்யப்பட்டிருந்ததுடன், இளைஞர்களின் நடமாட்டமும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கும் கடுமையான பாதுகாப்பு, ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதேபோன்றே யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை திடீர் ஏற்பாட்டில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து, முதலமைச்சர் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டிவைத்தார்.

நிகழ்வில் கல்வி அமைச்சர் த. குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப் பினர்கள் வே.சிவயோகன், பா.கஜதீபன், இ.ஆனல்ட் ஆகியோரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

0 Responses to தடைகளை தாண்டி மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நாட்டினார் முதலமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com