Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளனர் .

இது குறித்து மாணவர்களின் அறிக்கை வருமாறு :

இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம்.

ஆகவே அரசாங்கமானது போராட்டத்தை ஒடுக்கிவரும் இந்த சூழலில் மக்களிடையே நமது கோரிக்கையை எடுத்து செல்வதற்காக தமிழகம் முழுவதும் தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களாகிய நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.

ஐ.நா மன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த மாதிரி பொது வாக்கெடுப்பின் முடிவுகளை சமர்பிக்க இருக்கிறோம்.

கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள் ,தனி நபர்கள் அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த மாதிரி பொதுவாகெடுப்பினை வெற்றி பெறச் செய்வோம் .

இந்த நகர்வின் மூலமாக :-

1) தனி ஈழத்திற்கு ஆதரவாக இத்தனை பேர் தமிழகத்தில் இருக்கிறோம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறவும்..

2) பொது வாக்கெடுப்பே நமது கோரிக்கை அதுவே தனி ஈழத்தை அமைத்துக் கொடுக்கும் என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்..

3) நமது கோரிக்கைகளை வலுவற்றதாக்கும் இந்தியாவின் சதிகளை முறியடிக்கவும் ..
தமிழக மக்களிடம் மாதிரி பொது வாக்கெடுப்பை எடுக்க இருக்கிறோம்!

எங்களது வாக்குபதிவு செய்யும் மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் நிறுவ உள்ளோம் .பொதுமக்கள் அங்குவந்து அவர்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு பதிவு செய்வோம்.

பெரு நகரங்களில் மக்கள் கூடும் வணிக வளாகங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்போம் .

இணைய தளத்திலும் வாக்கு சேகரிப்பு நடைபெறும்.

இதுமட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் நமக்கு ஆதரவாக அவரவர் நாடுகளில் மாதிரி பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளார்கள் .

ஜனவரி 1 முதல் 15 வரை மாதிரி பொதுவாக்கெடுப்பு நடக்கும் .
தமிழீழமே தீர்வு என்பதை அதன் முடிவு தீர்மானிக்கட்டும் !

இவ்வாறு மாணவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

0 Responses to தமிழீழத்திற்கான மாதிரி பொது வாக்கெடுப்பை தமிழகத்தில் முன்னெடுக்க இருக்கும் மாணவர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com