Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் நல்லிணக்கத்திற்கோ, ஒருமைப்பாட்டுக்கோ தீங்கு விளைவிக்கும் எந்தவித கருத்துக்களையும் கவிஞரும், நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் வெளியிடவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று கூறி வுவனியாவின் மாங்குளத்தில் வைத்து வ.ஐ.ச.ஜெயபாலன் இராணுவத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜெயபாலன் செயற்பட்டு வந்ததாக கூறியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், அரசியல் நிலைப்பாடுகளினைத் தாண்டி இலக்கியவாதி என்கிற அடிப்படையில் ஜெயபாலனோடு தனக்கு தொடர்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வவுனியாவில் வைத்து இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜெயபாலன், குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன.

0 Responses to வ.ஐ.ச.ஜெயபாலன் நல்லிணக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை:ரவூப் ஹக்கீம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com