Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் பங்களித்ததன் பின்னர் தன் மீதும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்), இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

பொதுநலவாய மாநாடுகளுக்காக இலங்கை வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கும் கடந்த 15ஆம் திகதி விஜயம் செய்தார். அப்போது, யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதில், வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனும் முன்நின்றார்.

இந்த நிலையிலேயே தனக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் அச்சுறுத்தல்களும், அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக தெரிவித்து அவர், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாட்டினைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

0 Responses to அச்சுறுத்தல்கள் தொடர்வதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com