Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மக்கள் குறித்தும் காணாமல் போன­வர்கள் குறித்தும் பிரித்­தா­னிய பிர­தமர் மற்றும் சனல் 4 தொலைக்­காட்­சி­யாளர்  தொடர்பாக முரளிதரன் கூறிய கூற்­றுக்­களை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றேன். அவர் முன்வைத்த கருத்­துக்கள் தொடர்­பாக தமிழ் சமூ­கமே பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ளது என முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி. டி.வி. சென்னன் தெரி­வித்தார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முர­ளி­த­ரனின் கூற்று குறித்து பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்...

உள்­நாட்­டி­லி­ருந்தும், வெளி­நாட்­டி­லி­ருந்தும் எந்­த­வொரு அர­சியல்வாதியும், பொறுப்பு மிக்­க­வரும் நாட்டின் வட­ப­கு­திக்குச் சென்றால், அப்­ப­குதி மக்கள் அழுது புலம்பி கோரிக்­கை­களை முன் வைத்து அனை­வ­ரு­டைய மனங்­களை நெகிழ வைத்து வரு­கின்­றனர். அவர்­களின் அவல நிலைக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் பதில் கூறி­யாக வேண்டும்.

இது விட­யத்தில் ஆளும் கட்­சி­யி­னரும் அக்­கட்­சி­யுடன் இணைந்­த­வர்­களும் எந்­த­வொரு கருத்­துக்­க­ளையும் முன் வைக்­காமல் மெள­னத்­தையே கடைப்­பி­டித்து வரு­கின்­றனர்.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவோ, பிரதி அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனோ வடக்கில் காணாமல் போன­வர்கள் குறித்து எவ்­வித கருத்­துக்­க­ளையும் கூறாமல் இருக்­கின்­றனர்.

இந்­நி­லையில் வடக்கு மக்கள் பொய் கூறு­கின்­றனர் அங்கு எதுவும் நடக்­க­வில்லை என்ற ரீதியில் முத்தையா முர­ளி­த­ரனின் கூற்று அமைந்­துள்­ளது.

அந்­த­வ­கையில் வடக்கு மக்­களை அவ­ம­திக்கும் வகை­யிலும் அவர்­க­ளது முன்­னெ­டுப்­புக்­களை கொச்­சைப்­ப­டுத்தி அவர்­க­ளது நியா­ய­மான கோரிக்­கை­களை மழுங்­க­டிக்கும் படியும் முர­ளி­த­ரனின் கூற்று அமைந்­தி­ருக்­கின்­றது.

முத்­தையா முர­ளி­தரன் மீது மலை­ய­கத்­ தமிழ் மக்கள் மட்­டு­மன்றி வடக்கு உள்­ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் மக்­களும் பெரும் நம்­பிக்­கை­யையும் விசு­வா­சத்­தையும் வைத்­தி­ருந்­தனர்.

அவ்­வி­சு­வா­சமும் நம்­பிக்­கையும் தற்­போது வீணா­கி­யுள்­ளன. குறிப்­பாக கூறினால் முத்­தையா முர­ளி­தரன் ஒட்டு மொத்த தமிழ் மக்­க­ளி­லி­ருந்தும் ஓரம் கட்­டப்­பட்­டுள்ளார்.

பிரித்­தா­னிய பிர­தமர் வட பகுதி சென்று உண்மை நிலை­யினை அறிந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­யங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தார்.

அந்­நி­லையில் முத்­தையா முர­ளி­தரன் பிரித்­தா­னிய பிர­தமர் நேரில் கண்டு வந்த விட­யங்­க­ளையும் பொய்­யெனக் கூறி­யுள்ளார்

அர­சுக்கு வக்­கா­ளத்து வாங்கும் முத்­தையா முரளிதரன் அரசுடன் இணைந்து தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் வகையிலேயே அவரின் கூற்று அமைந்திருப்பதாக ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கருதி வருகின்றனர்.

இதனை எல்லா வகையிலும் முத்தையா முரளிதரன் இல்லாமல் செய்து விட முடியாது என்றார்.

0 Responses to வடக்கு தமிழ் மக்கள் குறித்து, அரசுக்கு வக்காளத்து வாங்கும் முரளியின் கருத்துக்கு முன்னாள் பா.உ. சென்னன் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com