ரஷ்யாவின் வொல்கோகார்ட் எனும் இடத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக ரஷ்ய தீவிரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், இதே போன்று பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இன்னமும் ஆறு வாரங்களில் ரஷ்யாவின் சோச்சி நகரில், 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் மறுபடியும் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக ரஷ்யாவின் வடக்கு கௌகாசஸ் நகரிலிருக்கும் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழுவினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 900 கி.மீ தொலைவில் உள்ளது வொல்கோகிராட். தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நேரடியாக சில பாதுகாப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது. எனினும் இக்குண்டுத்தாக்குதலுக்கு எக்குழுவினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இக்குண்டுத் தாக்குதலை அடுத்து ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் என்பன பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 Responses to ரஷ்யாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் : 13 பேர் பலி