Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக் கிழமை லெபனானில் இருந்து வந்த ராக்கெட்டுக்கள் வடக்கு இஸ்ரேலின் கிர்யாட் ஸ்மோனா நகருக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

மேலும் இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் குறித்த ராக்கெட்டுக்கள் வந்த திசையில் தென் லெபனானை நோக்கி குறைந்தது 20 ராக்கெட்டுக்களை ஏவித் தாக்கியதாகவும் IDF எனும் இஸ்ரேல் பாதுகாப்புப் பிரிவும் லெபனானின் தேசிய செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளன.

இருந்த போதும் இரு தரப்பில் இருந்தும் சேத விபரம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை இன்னமும் இரு நாட்களில் 26 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே இராஜ தந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடனே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இன் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஜோன் கெரி இவ்வார இறுதிக்குள் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை குறித்த இணக்கப் பாடுகளை ஏற்படுத்துவதற்காக விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to லெபனானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக 20 ராக்கெட்டுக்களை தென் லெபனான் மீது ஏவியது இஸ்ரேல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com