Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில சட்ட பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி திட்டத்தை 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மரண தண்டனை பெற்றுள்ளவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 14 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அவர்கள் கருணை மனு மீதான பரிசீலனை 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது விசாரணை முடிந்துள்ளது. ஜனவரி மாதம் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்றார்.

0 Responses to பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com