2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகள் கலைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னைய குழுநிலை விவாதத்தில் இன்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு நடத்துவதற்கு தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோட்டமாகவே மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளின் தேர்தல் களத்தை பரிசோதிக்க முயல்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, மேற்கு மாகாண சபையின் அரசாங்கத்தின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் முன்னிறுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அடுத்த 2, 3 வாரங்களில் கலைக்கப்படும்: சுசில் பிரேமஜயந்த