கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் சரியானது அல்ல.
அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டால் கிளிநொச்சியிலுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இரணைமடுக் குளத்திலிருந்து வரும் நீரை நம்பி ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், நீர்வரத்து மட்டுப்படுத்தப்பட்டால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும். அது, பிரதேசத்தின் விவசாயத்தையே கேள்விக்குறியாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி விவசாயிகள் அமைப்பின் உப தலைவர் சி.சிவப்பிரகாரம் உள்ளிட்டோர் இன்று புதன்கிழமை கரைச்சி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளனர்.
பருவகால மழையினால் சில மாதங்கள் இரணைமடுக்குளத்திலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுவது உண்மை. ஆனால், வழக்கமாக பெருமளவு நீர், குடிநீருக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டால் அது விவசாயிகளைப் பாதிக்கும். அத்தோடு, குளத்தை இன்னமும் புனரமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதுவே தற்போதைக்கு முக்கியமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் குடிநீருக்கான தேவையை நிவர்த்திக்கும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் குடிநீர் வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த திட்டம் ஆரம்பித்தது முதல் கிளிநொச்சி விவசாயிகளும், பிரதேச அரசியல்வாதிகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இதனால், சர்ச்சை நீடிக்கிறது.

0 Responses to இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்குவது தவறு: கிளிநொச்சி விவசாயிகள்